வலைப்பதிவுகளின் திரை விமர்சனம்
புதுப்பிக்கப்பட்ட நேரம் : November 22, 2014, 11:09 pm
சூடான சினிமா இடுகைகள்
சமீபத்தில் எழுதப்பட்ட திரை விமர்சனம்2013ம் ஆண்டில் வெளிவந்து வசூல்ரீதியாக சாதனை புரிந்த படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் மற்றும் ...மேலும் வாசிக்க
2013ம் ஆண்டில் வெளிவந்து வசூல்ரீதியாக சாதனை புரிந்த படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'.சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீதிவ்யா,
சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க, இமான் இசையமைப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்படம், கடந்த ஆண்டின் மாபெரும் வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இந்தப்படம், சமீபத்தில் தெலுங்கிலும் 'கரண்ட்டீகா' என்ற பெயரில், ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வசூலில் சாதனை புரிந்துள்ளது. அதன் பின் மீண்டும் பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணி 'ரஜினிமுருகன்' படத்தில் இணைந்துள்ளனர். அவர்களின் முதல்படம் வெளிவந்து சில காரணங்களால், பல மாதங்கள் கழித்து அவர்களின் இரண்டாவது படமாக 'ரஜினிமுருகன்' ஆரம்பமாகி உள்ளது.

இந்தப்படத்தையும், முதல் படம் போலவே மிகவும் கலகலப்பாக உருவாக்கி வருகிறார்களாம். படத்தின் படப்பிடிப்பு, சில வாரங்களுக்கு முன் ஆரம்பமாகி, தற்போது, காரைக்குடியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக அந்த நாள் நடிகை மேனகாவின் மகள் கீர்த்திசுரேஷ் நடித்துவருகிறார். ராஜ்கிரண், சமுத்திரக்கனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தில் அனைவரின் கதாபாத்திரமும் நகைச்சுவை கலந்துதான் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அடுத்த ஆண்டு கோடைவிடுமுறையின் போது படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய குட்டி பத்மினி, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்தார். சிவாஜியுடன் ...மேலும் வாசிக்க
குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கிய குட்டி பத்மினி, எம்.ஜி.ஆருடனும், சிவாஜிகணேசனுடனும் பல படங்களில் நடித்தார்.

சிவாஜியுடன் நடித்த அனுபவங்கள் குறித்து குட்டி பத்மினி கூறியதாவது:-

"நடிப்பில் சிவாஜி சார் இமயம் என்று தெரியும். ஆனால், அப்போது பேபி நட்சத்திரமாக இருந்த எனக்கு, இது தெரிந்திருக்க வாய்ப்பில்லையே.

ஏ.பி.நாகராஜன் அங்கிள் அப்போது எடுத்த "திருவருட்செல்வர்" படத்தில் சிவாஜி சார் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜி சாருடன் விவாதம் செய்யும் ஒரு காட்சியில் நடிக்க என்னை 'புக்' செய்தார்கள். புராணப்படம் என்பதால் தூய தமிழில் பேச ஏ.பி.நாகராஜன் அங்கிள் வீட்டில் ஒரு வாரம் எனக்கு 'சுத்தத் தமிழ்' கற்றுத் தந்தார்கள். இந்த ஒரு வாரத்தில் ஏ.பி.என். அங்கிளின் பிள்ளைகளும் எனக்கு 'பிரண்ட்ஸ்' ஆகிவிட்டார்கள்.

சிவாஜி சாருடன் நான் நடிக்க வேண்டிய காட்சி படமாகும் நாளும் வந்தது. அப்போதெல்லாம் எனக்கு 'நடிப்பு' பற்றி பயமே இருந்ததில்லை. படத்தில் திருமலை மன்னராக வரும் சிவாஜி சாருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவருக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்தும் சிறுமியாக நான் வந்தேன். கடவுள் நம்பிக்கை பற்றி நான் அவரிடம் பேசப்போக, அவரோ "கடவுள் இருக்கிறார் என்றால், அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?" என்று கேட்பார்.

"இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமானால் என்னை திருமலை மன்னராக்கி அரியணையில் அமர வைக்கவேண்டும்" என்பேன்.

உடனே திருமலை மன்னர் என்னை அரியணையில் அமர்த்தி மன்னராக மகுடம் சூட்டுவார். அடுத்த கணம் நான், "யாரங்கே! இதுவரை திருமலை மன்னராக இருந்த இவரை பிடித்து சிறையில் அடையுங்கள்" என்பேன். அப்படி உத்தரவிட்டு விட்டு, "கடவுள் இப்போது இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்" என்பேன்.

இதன் பிறகு திருமலை மன்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக திருந்துவதுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சியில் திருமலை மன்னராக நடிக்கும் சிவாஜி சார் உணர்ச்சி வேகத்தில் பேசிவிட்டு, என் காலில் விழுவதாக அந்தக் காட்சி முடியும்.

இந்தக்காட்சி பற்றி சிவாஜி சாரிடம் விளக்கிய உதவி இயக்குனர்கள், கடைசியில் 'கடவுள் ஞானம்' கொடுத்த சிறுமியின் காலில் விழுவதுடன் காட்சி முடியும் என்பதை தயங்கித் தயங்கி சொன்னார்கள். ஆனால் சிவாஜி சார் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. காட்சியில் உணர்ச்சிகரமாக பேசிக் கொண்டு வந்தவர், "அம்மா நீ சிறு பெண்ணல்ல; என் அறிவுக்கண் திறக்க வந்த தெய்வம்" என்று சொல்லி என் கால் பக்கமாக விழுந்து விட்டார்.

டைரக்டர் ஏ.பி.நாகராஜன் அங்கிள் 'கட்' செய்யவும் மறந்து ஒரு கணம் பிரமித்து நின்று விட்டார். காட்சியின் கனம் கருதி எந்த நடிப்புக்கும் தயாராக இருந்த சிவாஜி சாரை நினைத்தால் இப்போதும் அவர் மீது ஒரு மரியாதை ஏற்படுகிறது. இந்தப்படம் பற்றி அப்போது விமர்சனம் எழுதிய ஒரு பத்திரிகை, இந்தக் காட்சி பற்றி குறிப்பிடும்போது "திமிங்கலத்தை சின்ன மீன் விழுங்கிவிட்டது" என்று வர்ணித்திருந்தது.

அதுமாதிரி, "திருமால் பெருமை" படத்திலும் ஒரு உணர்ச்சிமயமான காட்சி சிவாஜி சாருக்கும் எனக்கும் இருந்தது. படத்தில் குட்டி ஆண்டாளாக வரும் நான் திருமாலுக்கு என் தந்தை (சிவாஜி) சூடிய மாலையை என் கழுத்தில் எடுத்து போட்டுக்கொள்வேன். ஆத்திரமாகும் அப்பா என் மீது கோபப்படுவதாக காட்சி. இந்தக் காட்சியின்போது நான் கொஞ்சமும் எதிர்பாராமல் சிவாஜி சார் என் கன்னத்தில் ஓங்கி விட்டார் ஒரு அறை. அந்த அறையின் வேகத்தில் என் காதில் இருந்த கம்மல் தெறித்து விழுந்தது. பொறி கலங்கிப்போனேன். என்றாலும் நான் தொடர்ந்து பேசவேண்டிய வசனத்தை பேசி முடித்தேன்.

காட்சி முடிந்ததும் சிவாஜி சார் ஓடிவந்து என் கன்னத்தை தடவி விட்டார். பிறகு அம்மாவிடம் அந்தக் காட்சிக்கான விளக்கம் சொன்னார். "இந்தக் காட்சியில் நான் கன்னத்தில் அறைவதை முதலிலேயே சொல்லியிருந்தால் உங்கள் பெண், நான் அடிக்கும்போது கன்னத்தை திருப்பியிருப்பாள். அப்படிச் செய்திருந்தால் அந்தக்காட்சி இயல்பாக அமையாது. அதனால்தான் அடிப்பதை முன்கூட்டியே சொல்லவில்லை. ஆனால் இப்படி சொல்லாமல் கன்னத்தில் அடித்தும், நடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து அழுதுகொண்டே வசனம் பேசி நடித்த உங்கள் பெண் என்னை ரொம்பவே கவர்ந்து விட்டாள்" என்று சொன்னவர், "உங்க கையை நீட்டுங்க" என்றார், அம்மாவிடம்.

அம்மா 'எதற்கு' என்று புரியாமல் பார்த்த நேரத்தில், "எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுங்க. உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்கிற கால கட்டத்துல என்கூட தான் முதல்ல நடிக்கணும்" என்றார்.

அம்மா அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். பெண்ணின் நடிப்பு மீது அந்த மகா கலைஞர் வைத்த நம்பிக்கையும், சிறு குழந்தை மாதிரி அவர் கேட்ட சத்தியமும் அம்மாவை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது."

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

குட்டி பத்மினி 'பேபி'யாக நடித்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த 'நம் நாடு' படம் முக்கியமானது. இந்தப் படத்தில் குட்டி பத்மினியும், பேபி ஸ்ரீதேவியும் நடித்திருந்தனர். படத்தில் இருவரும் எம்.ஜி.ஆரின் அண்ணன் டி.கே.பகவதியின் மகள் - மகனாக (ஸ்ரீதேவிக்கு பையன் வேடம்) நடித்தனர்.

எம்.ஜி.ஆருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவம் பற்றி குட்டி பத்மினி கூறியதாவது:-

"அப்போது நான் தொடர்ந்து பல படங்களில் மற்ற மொழிப் படங்களில் பிசியாக இருந்ததால் எம்.ஜி.ஆர். சாரின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெரும்பாலும் வந்து வந்து கைநழுவிப் போகும். காரணம் அவர் படம் என்றால் நிறைய நாட்களை மொத்தமாக கேட்பார்கள். ஆனால் படத்தை தயாரித்த நாகிரெட்டி அங்கிள் "இந்தப் படத்தில் குட்டி பத்மினி இருந்தேயாக வேண்டும்" என்று சொல்லி விட்டதால், என் வாய்ப்பு உறுதியானது.

எம்.ஜி.ஆர். சார் எனக்கு உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவம் பற்றி வகுப்பே எடுப்பார். தினமும் காலையில் என்னைப் பார்த்ததும், "ஸ்கிப்பிங் பண்ணினாயா?" என்று கேட்பார். "இல்லை" என்று சொன்னால் தன் காரில் இருக்கும் ஸ்கிப்பிங் கயிறை எடுத்து வரச்செய்து, 'ஷாட்' இல்லாத நேரத்தில் பயிற்சி எடுக்கச் செய்வார்.

மதியம் சாப்பாட்டு நேரத்தில் அவருடனே சாப்பிடச் செய்வார். சாப்பிட்டு முடிந்ததும் ஒரு மணி நேரம் ஆகும் வரை தண்ணீர் சாப்பிடக்கூடாது என்பார். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பது தவறில்லை என்பார்.

ஒருமுறை செட்டில் அம்மாவிடம் கோபமாக பேசிவிட்டேன். இதை கவனித்த எம்.ஜி.ஆர். என்னை அழைத்தார். "அம்மாவை மட்டும் எப்போதும் மரியாதையாய் பேசணும். "தாயிற் சிறந்ததோர் கோவிலும் இல்லை"ன்னு பெரியவங்க எதுக்காக சொல்லி இருக்காங்க? அந்த அளவுக்கு அம்மாங்கறவங்க தெய்வத்துக்கு சமமானவங்க. எனக்கு எங்கம்மா இருந்தப்ப அவங்களோட அருமை தெரியலை. அவங்க இல்லாதப்பதான் 'தெய்வத்தை அல்லவா இழந்திருக்கிறோம்'னு புரிஞ்சுது. அம்மா என்கூட இல்லைங்கறது இப்ப வரைக்கும் எனக்கு இழப்புதான். அதனால் ஒருநாளும் அம்மா கிட்ட முகம் சுளிக்கிற மாதிரி கூட பேசக்கூடாது" என்றார்.

இதை அவருக்கே உரிய பாசக்குரலில் அவர் சொன்னபோது, 'அம்மா'வின் அன்பு எனக்கும் புரிந்தது. அதன் பிறகு அம்மாவிடம் கொஞ்சம் குரல் உயர்த்தி பேசுவதைக்கூட விட்டுவிட்டேன்.

நான் பார்த்தவரை அவரைப் பார்த்து உதவி கேட்க, எப்போதும் யாராவது வந்து கொண்டே இருப்பார்கள். இதற்கென்றே அவரது மானேஜராக இருந்த பத்மனாபன் பணத்துடன் தயாராக இருப்பார். அத்தியாவசிய உதவி என்றால் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது கொடுப்பார். ஆயிரம் ரூபாய் என்பது அப்போது மிகப்பெரிய தொகை. யாராவது 'ஸ்கூல் பீஸ்' கேட்டு வந்தால், "முகவரி கொடுத்திட்டுப் போங்க. பணம் அனுப்புகிறேன்" என்பார். அது மாதிரி உதவி பெற்ற பலர் அவரை சந்தித்து கண் கலங்க நன்றி சொல்வதையும் பார்த்திருக்கிறேன்.

இப்படி ஒரு தர்மத்தலைவரை என் சிறு வயதில் பார்த்ததால்தான் நானும் வளர்ந்த நேரத்தில் "மித்ராலயா" டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கி என்னாலான உதவிகளை ஓசைப்படாமல் செய்து வருகிறேன்."

இவ்வாறு குட்டி பத்மினி கூறினார்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான அஞ்சான், பூஜை படங்களைத் தொடர்ந்து திருடன் போலீஸ் வெளியானது. அதையடுத்து, தெலுங்கு, ...மேலும் வாசிக்க
யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான அஞ்சான், பூஜை படங்களைத் தொடர்ந்து திருடன் போலீஸ் வெளியானது. அதையடுத்து, தெலுங்கு, இந்தி படங்களிலும் தற்போது பரவலாக இசையமைத்துக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில், சமீபகாலமாக, அவர் மதம் மாறியது, 3வது திருமண வேலைகளில் இறங்கியது என தனது கவனத்தை திருப்பியதால் அவரிடத்தில் முன்பு போல் இசை மீது ஈடுபாடு இல்லை என்ற செய்தி கோலிவுட்டில் வேகமாக பரவியது.

அதற்கேற்ப, அவரும் அண்டை மாநில மொழிப்படங்களில் இசையமைக்க வெளியூர்களில் முகாமிட்டிருந்ததால் சென்னையில் அவர் இசையமைத்து வந்த இசைக்கூடாரம் எப்போதும் வெறிச்சோடியே கிடந்து. அதனால் பலரும் அதை நம்பத் தொடங்கினர்.
ஆனால் இந்த விசயம் யுவன் ஷங்கரின் காதுக்கு சென்றபோது, தான் எப்போதும் போலவே இப்போதும் அதே உற்சாகத்தில் இசையமைத்துக்கொண்டிருப்பதை கோலிவுட்டுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக, மீண்டும் சென்னை வந்து ரெக்கார்டிங தியேட்டரில் பரபரப்பாக வேலைகளை முடுக்கி விட்டிருக்கிறார். தன் கைவசம் உள்ள மாஸ், யட்சன், இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களுக்கு வித்தியாசமான இசையை கொடுத்து தனது மார்க்கெட்டை இன்னும உறுதிப்படுத்த வேண்டும் என்று மும்முரமாகியிருக்கிறாராம் யுவன் ஷங்கர் ராஜா.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஒரு காலத்தில் தூங்குவதற்குகூட நேரமில்லாமல் பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர் ரஜினி. பெரும்பாலான நாட்களில் நான் அறையில் தூங்கியதில்லை. கார்களில் ஒரு ...மேலும் வாசிக்க
ஒரு காலத்தில் தூங்குவதற்குகூட நேரமில்லாமல் பிசியாக நடித்துக்கொண்டிருந்தவர் ரஜினி. பெரும்பாலான நாட்களில் நான் அறையில் தூங்கியதில்லை. கார்களில் ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருந்து இன்னொரு படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நேரத்தில்தான் தூங்குவேன். அதையடுத்து, நடிக்கத் தொடங்கி விடுவேன். பின்னர் இடையிடையே கிடைக்கும் நேரங்களில் ஒரு மணி நேரம், அரை மணி நேரம் என்று அவ்வப்போது தூங்கிக்கொள்வேன் என்று அவரே ஒரு பட விழாவில் கூறினார்.

அப்படிப்பட்ட ரஜினி, ராணா பட பூஜைக்குப்பிறகு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அதிகமான நேரத்தை இப்போது ஓய்வெடுத்து வருவதாகவே செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அதோடு நெருக்கான சினிமா நண்பர்களின் பட விழாக்களைக்கூட அவர் தவிர்ப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் அது உண்மயில்லையாம். கமல், மணிரத்னம், வைரமுத்து. ஏ.ஆர்.ரகுமான் போன்ற அபிமானிகள் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு இப்போதும் ரஜினி வந்துதான் செல்கிறாராம். ஆனால் அவர், தலையில் வித்தியாசமான விக் அணிவதோடு, தனது முகத்தின் பெரும்பகுதியை மறைத்துககொள்ளும் வகையிலான ஒரு தாடியையும் அணிந்து வருகிறாராம். அதோடு தன்னை அடையாளம் கண்டுகொள்ளாத உடைகளை அணிகிறாராம்.

இதற்கான விக்குகளை எந்திரன் படத்தில் அவருக்கு விக் செய்து கொடுத்த ஹேர் டிரஸ்ஸர் ரெடி பண்ணிக்கொடுத்திருக்கிறாராம். மேலும், அப்படி தான் வரும்போது தனது வழக்கமான காரை பயன்படுத்தாமல், சாதாரணமான மாருதி காரில் வந்திறங்கும் ரஜினி, விழா ஹாலுக்குள்ளும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு ஓரமாக வந்து அமர்ந்துவிட்டு செல்கிறாராம். அப்போது ஒரேயொரு உதவியாளர் மட்டுமே அவருடன் இருப்பாராம். இப்படி ரஜினி விழாவுக்கு வந்து செல்கிற விசயம், விழா சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியுமாம். அவர்களும் அதை ரகசியமாக வைத்திருப்பார்களாம்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிச்சட்டை படத்தின் இசைவெளியீடு டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசையை கமல் ...மேலும் வாசிக்க
சிவகார்த்திகேயன் நடிக்கும் காக்கிச்சட்டை படத்தின் இசைவெளியீடு டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசையை கமல் வெளியிடுகிறார். எதிர்நீச்சல் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கும் அடுத்த படம் காக்கிச்சட்டை. இப்படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் க்ரைம் பிராஞ்ச் போலீஸ் ஆபிஸராக நடிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. அதோடு, 3, எதிர்நீச்சல், மான் கராத்தே படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கும் இசையமைக்கிறார் அனிருத்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் காக்கிச்சட்டை படத்தின் பாடல்களை டிசம்பர் 2 ஆம் வாரத்தில் அதாவது 14 ஆம் தேதி அன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். பழைய காக்கிச்சட்டை படத்தின் கதாநாயகனான கமல் புதிய காக்கிச்சட்டை படத்தின் இசையை வெளியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்பதால் கமலை அணுகி உள்ளனர். கமல்ஹாசனும் வர சம்மதித்துவிட்டாராம். காக்கிச்சட்டை படத்தை வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம். இப்படத்தின் தமிழக உரிமையை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் பெற்றிருக்கிறார்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கன்னட நடிகர் -சுதீப். அங்கு அவர் ...மேலும் வாசிக்க


நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கன்னட நடிகர் -சுதீப். அங்கு அவர் ஆக்ஷன் ஹீரோ. தமிழில் ஹிட்டாகும் படங்களை கன்னடத்தில் ரீமேக் செய்து நடிப்பார். நான் ஈ படத்திற்கு பிறகு அவர் கன்னடத்தில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இது தமிழ் தவிர கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் படமாகும் திகில் படம். இந்தப் படம் பிப்ரவரியில் தொடங்குகிறது.

"நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்ற பல வருடங்களுக்கு முன்பே கே.எஸ்.ரவிகுமார் சார் கூறியிருந்தார். அதற்கான காலம் இப்போது கனிந்திருக்கிறது. அருமையான கதையை என்னிடம் சொல்லியிருக்கிறார். அதனை விரைவில் தொடங்குகிறோம். லிங்கா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாகிவிடுவேன்" என்கிறார் சுதீப்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


'ரூம் போட்டு யோசிப்பாங்களோ?' என கேட்கவைக்கும் பல படைப்புகளைச் சாத்தியமாக்குவது குறும்படங்கள்தான். அந்த வகையில், '69' என்ற மலையாளக் ...மேலும் வாசிக்க
'ரூம் போட்டு யோசிப்பாங்களோ?' என கேட்கவைக்கும் பல படைப்புகளைச் சாத்தியமாக்குவது குறும்படங்கள்தான். அந்த வகையில், '69' என்ற மலையாளக் குறும்படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள்.
 'சாப்பிடக் கூடாது' என கடவுளால் அறிவுறுத்தப்பட்ட பழத்தை ஆர்வமிகுதியில் கடித்துவிட்டாள் ஏவாள். அதனால்தான் பெண்கள் உலகம் தோன்றியதிலிருந்து இன்றுவரை ஆண்களுக்குக் கீழ்ப்படிந்துகொண்டிருக்கிறார்கள் என்கிற கருத்துக்கு எதிர் சிந்தனைதான் கதைக்களம். அதாவது, ''அந்த ஆப்பிளை ஏவாள் கடிக்காமல், ஆதாம்  கடித்திருந்தால்?"


முதல்காட்சியில் வீட்டுக்கு முன்பு அங்கும் இங்குமாக புகைபிடித்தபடி ஒரு பெண் நடந்துகொண்டிருக்க, குத்துவிளக்கை அணையாமல் கையிலேந்தி வந்து நளினம் காட்டுகிறான் ஒருவன். இப்படி ஆரம்பிக்கும் இந்தக் குறும்படத்தின் இறுதிக் காட்சியில் பேருந்தில்  பயணிக்கும் ஒரு பெண்ணின் காதலனை பேருந்தை இயக்கும் மூன்று பெண்கள் சேர்ந்து பலாத்காரம் செய்து ரோட்டில் தூக்கி வீசுவதாக முடிகிறது.

இடைப்பட்ட காட்சிகளில் பஸ்ஸில்  ஆண்களை பெண்கள் உரசுகிறார்கள். பாடம் நடத்தும் புரொஃபஸரின் தொப்புளை பெண்கள் ரசித்துப் பார்க்கிறார்கள். தண்ணி அடித்துவிட்டு வீட்டில் கலாட்டா செய்வதோடு, புருஷனைப் புரட்டி எடுக்கிறார் ஒரு பெண். பஸ்ஸில் தொங்கியபடியே பயணிக்கிறார்கள் பெண்கள். கட் அவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வதும் தியேட்டர் முன்பு ஆடிப்பாடி ஆட்டம் போடுவதும் பெண்களே. தவிர, சிறுவன் ஒருவனைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்கிறாள் ஒருத்தி. இப்படி படம் நெடுக எதிர்மறை சிந்தனைதான். சுருக்கமாகச் சொன்னால், நம் சமூகத்தில் ஆண்களால் பெண்களுக்கு நடந்துகொண்டிருக்கும் அனைத்து கொடுமைகளும், '69' குறும்படத்தில் பெண்களால் ஆண்களுக்கு நடக்கிறது.


19 நிமிடங்கள் ஓடும் குறும்படமாக இருந்தாலும், திரைப்படத்திற்கான சுவாரஸ்யம்.  படத்தின் துவக்கத்தில் 'ஆதாம்-ஏவாள்' கதைக்கு பயன்படுத்தியிருக்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள், பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாமே அருமை. கேரளாவைச் சேர்ந்த ஃபிரோஜ் ஏ.அஜீஸ் என்பவர் இயக்கியிருக்கும் இந்தக் குறும்படத்தினை இதுவரை 23 லட்சத்திற்கும் அதிகமானோர் ரசித்திருக்கிறார்கள். யூடியூபில் பார்க்க : https://www.youtube.com/watch?v=ZS7PO7_tLyM

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


’ஈ’யை தொடர்ந்து தமிழ் சினிமாவை மீண்டும் கலக்க வந்திருக்கிறது ஒரு நாய். ஹீரோ என்றால் ஆறடி உயரம், அழகான ...மேலும் வாசிக்க
’ஈ’யை தொடர்ந்து தமிழ் சினிமாவை மீண்டும் கலக்க வந்திருக்கிறது ஒரு நாய். ஹீரோ என்றால் ஆறடி உயரம், அழகான தோற்றம் என்று இருக்க வேண்டியது இல்லை. அப்படி ஒரு ஹீரோ இந்த படத்திலும் இருக்கிறார், ஆனால், அவரையே தூக்கி சாப்பிடுவது போல் ஒரு கதாபாத்திரம் தான் இட்தோ என்ற நாய்.

பெல்ஜியன் ஷெப்பர்ட் டாக் ஒன்றை இப்படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடிக்க வைத்த சக்தி ராஜனை மனம் திறந்து பாராட்டலாம். எந்த ஒரு இடத்திலும் விலங்குகளை கொடுமை செய்யாமல் ஒரு ஸ்டார் அந்தஸ்தை கொடுத்துள்ளார் இட்தோவிற்கு.

கதை

சிபிராஜ் ஒரு கடமை தவறாத போலிஸ் அதிகாரி. அவருக்கும் அந்த நாய்க்குமான பழக்கம் அண்ணன், தம்பி போல் மிக அழகாக உள்ளது. சொல்லப்போனால் ஹீரோயினை விட இவர்கள் கெமிஸ்ட்ரி தான் நன்றாக உள்ளது. கதாநாயகியாக வரும் அருந்ததி அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர் சிபிராஜின் மனைவியாக வருகிறார். சுபமாக போகும் படத்தில் எப்போதும் போல் ஹீரோவிற்கு வேலை வைக்க வேண்டும் என்பதற்காக வில்லன் கும்பல் ஹீரோயினை கடத்துகிறார்கள்.அதை எப்படி தன் இட்தோவுடன் சேர்ந்து கண்டு பிடிக்கிறார் என்று சுவாரசியமாக கூறியிருக்கிறது நாய்கள் ஜாக்கிரதை.

நடிகர். நடிகைகள் இன்வால்மெண்ட்

சிபிராஜ்க்கு கண்டிப்பாக இந்த படம் கம் பேக் தான். அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். இதற்கெல்லாம் மேலாக மொத்த படத்தையும் தூக்கி செல்வது இட்தோ தான் என்றால் யாரும் மறுப்பதாக இல்லை.

க்ளாப்ஸ்

இட்தோ வரும் அனைத்து காட்சிகளும். ஒளிப்பதிவு மிகவும் நேட்டிவிட்டியாக உள்ளது, குறிப்பாக அந்த ஊட்டி சம்மந்தப்பட்ட காட்சிகள் மிகவும் அழகாக உள்ளது. தருனின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பாடல்கள் சூப்பர்.

பல்ப்ஸ்

இயக்குனர் அதிகம் ஆங்கில படம் பார்ப்பார் போல், அதிலும் குறிப்பாக பிரபல சைக்கோ படங்கள் சாயல் தெரிவதை தவிர்க்க முடியவில்லை. மற்றபடி பெரிதாக ஒன்றும் இல்லை.

மொத்தத்தில் இந்த நாய் கடிக்கவில்லை அனைவரையும் கவர்ந்துவிட்டது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


சமீபத்தில் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம் படுதோல்வியடைந்தால் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மாஸ் படத்தில் ...மேலும் வாசிக்க
சமீபத்தில் வெளிவந்த படம் அஞ்சான். இப்படம் படுதோல்வியடைந்தால் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மாஸ் படத்தில் நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கும் 24 என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் போஸ்டர் ஒன்று நேற்று வெளிவந்தது.

அதற்குள் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்ப வாய்ப்புள்ளது. 24 என்பது மலேசியாவில் ஒரு கேங்ஸ்டர் கும்பலை குறிப்பது. இதனால் இப்படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டும் என பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


 நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் தானும் ஒருநேரத்தில் சண்டைக்காரர்களாக இருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்தார். டெல்லியில் ...மேலும் வாசிக்க
 நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் தானும் ஒருநேரத்தில் சண்டைக்காரர்களாக இருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். அவர் பேசியதாவது:

சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் நானும் ஒருகாலத்தில் சண்டைக்காரர்கள் தெரியுமா?.. சொல்வது அர்னால்டு

1980களில் எங்களை ஒருவருக்கொருவர் பிடிக்காது. ஏனென்றால், அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்தோம். எங்களில் ஒருவரை விட மற்றொருவர் எப்படி சிறப்பாக வெளிப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தினோம். அந்த நேரத்தில் எங்களுக்குள் எல்லாவற்றிலும் போட்டி இருந்தது. பாடி பில்டிங் முதல் படத்தில் எதிரிகளை கொன்று குவிப்பது, யார் படம் அதிக வசூலாகிறது என்பது வரை அனைத்திலும் கடும் போட்டி இருந்தது.

ஆனால், பத்தாண்டு கடும் போட்டிக்கு பிறகு 90களில் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். எந்த ஒரு விஷயத்திலும் முதலில் உங்களை வெறுக்கும் ஒரு போட்டியாளர் தேவை. அதுதான் என்னை இந்த அளவு வளர்ச்சிக்கு கொண்டு வந்துள்ளது.

இப்போது நாங்கள் பக்குவமாக இருக்கிறோம். சில்வர்ஸ்டாரும் நானும் இணைந்து பல படங்களில் நடிக்கிறோம். நான் செய்யும் ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்யவே எப்போதும் விரும்புகிறேன். என் வாழ்க்கையில் பலமுறை தோல்வியை தழுவியிருக்கிறேன். ஆனால், ஒவ்வொருமுறை நீங்கள் தோல்வி அடையும்போதும் மீண்டும் எழுந்து இலட்சியத்தை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். அதுதான் உங்களை வெற்றியாளர் ஆக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


வித்தியாசமான படங்களை செய்ய விரும்பும் விதார்த்., கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம் தான் "காடு". புதியவர் ஸ்டாலின் ராமலிங்கத்தின் எழுத்து, ...மேலும் வாசிக்க
வித்தியாசமான படங்களை செய்ய விரும்பும் விதார்த்., கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம் தான் "காடு". புதியவர் ஸ்டாலின் ராமலிங்கத்தின் எழுத்து, இயக்கத்தில், இயக்குனர், நடிகர் சமுத்திரகனியும், சமூக புரட்சியாளராக பெரிய, பெரிய விஷயங்களை எல்லாம் பேசும் சின்னதொரு பாத்திரம் செய்து, விதார்த்துடன் இணைந்து காடு படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார்.

கதைப்படி, காட்டையும், காட்டை சார்ந்த விலங்குகள், மரங்களையும் நம்பி வாழ்க்கை நடத்தும் மலைஜாதி கிராமத்தை சார்ந்தவர் வேலு எனும் விதார்த். காட்டில் பட்டு விழும் மரங்களை விறகுகளாக்கி அந்த ஊர் டீ -டிபன் கடைக்கு விற்று பிழைப்பு நடத்தும் வேலு- விதார்த்துக்கும், அந்த டீக்கடையின் முதலாளி தம்பிராமைய்யாவின் மகள் பூங்கொடி எனும் சமஸ்கிருதிக்கும் காதல் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பூத்து காய்த்து குலுங்குகிறது.

இந்நிலையில், படித்து வேலையில்லாமல், ஃபாரஸ்ட் ஆபிசர் ஆகும் ஆசையுடன் திரியும் தன் நண்பனுக்காக, அவர் கடத்திய சந்தன கட்டைகளை, தான் கடத்தியதாக சொல்லி சிறைக்கு செல்கிறார் விதார்த். ஒருவாரத்தில் விதார்த்தை, ஜாமினில் எடுப்பதாக சொல்லி சிறைக்கு அனுப்பும் நண்பன்., விதார்த்தை பிடித்து கொடுத்ததையே பெரிய பெயராக்கி., பேனை பெருமாளாக்கி, தான் விரும்பிய காட்டு இலாகா வேலைக்கு போகிறார். சொன்னபடி விதார்த்தை மீட்கவும் இல்லை...சிறையில் வந்து சந்திக்கவும் இல்லை. மாறாக...தன் பதவியை பயன்படுத்தி தொடர்ந்து பெரும்புள்ளிகளுக்கு ஆதரவாக, சந்தன கட்டை கடத்தலில் ஈடுபடுவதுடன், அதற்கு இடைஞ்சலாக இருக்கும் மலைவாழ் மக்களை, மலையை விட்டு கீழே குடிபெயர செய்யும் முயற்சியிலும் இறங்குகிறார். இதில் கடுப்பாகும் விதார்த்., சிறையில் சந்திக்கும் புரட்சியாளர் சமுத்திரகனியின் அறிவுரைப்படி., சிறையை விட்டு வெளியில் வந்ததும் எடுக்கும் ஆக்ஷன் ரிவென்ஜ் தான் காடு படம் மொத்தமும்!. காட்டையும், காட்டு மக்களையும், விதார்த், தன் நண்பனின் நயவஞ்சகத்தில் இருந்து காப்பதும், காதலியை கரம்பிடிப்பதும் கிளைமாக்ஸ்!.

விதார்த்., வழக்கம்போலவே மலைவாழ் வேலுவாக மாற நிறைய உழைத்திருக்கிறார். ரொமான்ஸ் காட்சிகளிலும், ஆக்ஷன் காட்சிகளிலும் யதார்த்தமாக நடித்து ரசிகர்களை சீட்டோடு கட்டி போடுகிறார்.

இந்த காடுதான் எங்க கடவுள்., காடு அதுவா தர்றதை நாங்க வித்து பிழைப்பு நடத்துவோமே தவிர., ஒரு செடியை கூட வெட்டி சாய்க்க மாட்டோம்...என விதார்த் அடிக்கடி பேசும் டயலாக், மலைவாழ் மக்களின் புனிதத்தன்மையை போற்றும்படியாக அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

விதார்த்தின் காதலி பூங்கொடியாக வரும் சமஸ்கிருதி., தமிழ் சினிமாவுக்கு கிடைத்திருக்கும் மற்றொரு ரேவதி, ரோகிணி, தேவயானி ...எனலாம். அம்மணி, குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கிறார். பேஷ், பேஷ்!.

சமுத்திரகனி புரட்சியாளர் நந்தாவாக, சிறையில் சே குவேராவின் கருத்துக்களை கர்ஜிப்பதில், விதார்த்தின் கவனத்தை ஈர்த்து, அவரது எண்ணத்தில் புரட்சி விதையை தூவுவதில் மட்டுமல்ல...ரசிகர்களின் மனநிலைகளிலும் மாற்றங்களை கொண்டுவர முயல்வது காடு படத்தின் பெரும்பலம்!.

தம்பிராமைய்யா, சிங்கம்புலி, ஆடுகளம் நரேன், பூ ராம், ஆர்.என்.ஆர். மனோகர், டி.கே.கலா, லட்சுமி, கருணாவாக, துரோகியாக வரும் முத்துக்குமார் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

மகேந்திரன் ஜெயராஜூவின் ஒளிப்பதிவில் காடு மிளிர்கிறது. கேவின் இசையில் காடு மிரட்டுகிறது!.

காட்டில் இருக்கும் ஒவ்வொரு மரமும் உன் முன்னோர்களின் ஆன்மா, அதை வெட்ட வர்றவனை நீ வெட்டு தப்பில்லை. "சமாதானம்ங்கிறதே ஏமாற்று வேலைதான்", " உலகத்துலே மொத்தமே 8 பல்லுயிர் காடுகள் தான் இருக்கு....அதுல, 2 இந்தியாவுல இருக்கு" . புலிகளை கொன்னுட்டு, ஜூவுல பிடிச்சு அடைச்சுட்டு, காடுகளை எப்படி வளர்க்க முடியும்?! எனும் டயலாக்குகளிலும், தகவல்களிலும் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கும் இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம்.,இயக்கத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், படத்தை வளமசன காடு ஆகத்தான் படைத்திருக்கிறார்!.

மொத்தத்தில், விதார்த்தின் காடு விரும்பும் நம் "நாடு"...!

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியை ரஜினிகாந்த் புறக்கணித்துவிட்டார். ...மேலும் வாசிக்க
கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியை ரஜினிகாந்த் புறக்கணித்துவிட்டார்.

2014-ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்து வருகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 75 நாடுகளை சேர்ந்த 179 படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, ‘மோஷன் கேப்ச்சர்' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘கோச்சடையான்' திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.

கோவாவில் 'கோச்சடையான்' படத்தை புறக்கணித்தாரா ரஜினி?

இந்த படத்தின் திரையீட்டின்போது, கோச்சடையானில் கதாநாயகனாக நடித்திருந்த ரஜினிகாந்த் பங்கேற்பார் என விழா ஏற்பாட்டாளர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் படத்தின் இயக்குனரான சவுந்தர்யா ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.

கோவாவில் 'கோச்சடையான்' படத்தை புறக்கணித்தாரா ரஜினி?

கோச்சடையான் திரைப்படம் விழாவில் திரையிடப்படுவதற்கு முன் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் வேறு சில பணிக்காக பெங்களூரு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தொகுப்பாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், "இந்த படத்தின் மூலம் எனக்கு சர்வதேசத் திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் நான் சினிமாவுக்கு அறிமுகமானதை பெருமையாக கருதுகிறேன். எனது தந்தை இங்கு இல்லை. இந்தியாவில் முதன்முறையாக பர்ஃபார்மன்ஸ் கேட்ப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு கொண்டுவர அவர் துணையாக இருந்தார்" என்றார்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இப்போது படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. நவம்பர் 24-ம் தேதி, அதாவது திங்களன்று இந்தப் படத்தை ...மேலும் வாசிக்க
இப்போது படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. நவம்பர் 24-ம் தேதி, அதாவது திங்களன்று இந்தப் படத்தை சென்சார் குழுவினர் பார்க்கின்றனர்.

சென்சார் சான்றிதழ் பெற்றபிறகு வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

லிங்காவின் அனைத்து ஏரியாக்களும் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டன. தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தின் நாயகனான கமல் ஹாஸன், அவருடனான தனது அனுபவங்கள் நினைவுகளை தி இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார். ...மேலும் வாசிக்க
இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தின் நாயகனான கமல் ஹாஸன், அவருடனான தனது அனுபவங்கள் நினைவுகளை தி இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதோ கமலின் நினைவுப் பகிர்வு...

"சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம்.

சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.

சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்

நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே.

எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும்.

நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'.

கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன்.

அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது.

அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது, ஆனால் அப்படி ஆகவில்லை.

பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது.

கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார்.

படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.

'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை.

வணிக ரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திருந்தாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை.

ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம்.

தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார்.

தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


 பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதாவுக்கு இரு தினங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், 49 ...மேலும் வாசிக்க
 பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதாவுக்கு இரு தினங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், 49 வயதான சல்மான் கானின் தங்கைக்கு இப்போதுதான் திருமணம் நடக்கிறதா? அப்படியானால் தங்கை இத்தனை நாட்களாக முதிர் கன்னியாக இருந்தாரா? என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் எழுந்திருப்பது இயல்புதான். அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கால ஓட்டத்தில் கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

சல்மான் கானின் தந்தை சலிம்கான், பாலிவுட் படங்களில் நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராக இருந்தார். இவரது மனைவி சல்மா கான். இத்தம்பதிகளுக்கு சல்மான்கான், அர்பாஸ் கான், சோகைல் கான், அல்விரா கான் ஆகிய பிள்ளைகள் இருந்த நிலையில், பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் இருந்த அர்ப்பிதாவை சலிம்கான் தத்தெடுத்து வளர்த்தார்.

சல்மான்கானுக்கு 49, தங்கை அர்பிதாவுக்கு 25..! ஏன் இந்த வயசு வித்தியாசம் தெரியுமா?

எனவேதான், அண்ணன் சல்மான்கானுக்கு 49 வயதாகும் நிலையில், அர்ப்பிதாவுக்கு தற்போதுதான் 25 வயதானது. தத்தெடுத்த குழந்தை என்று நினைக்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அர்பிதாவுடன் மிகுந்த பாசம் காண்பித்தனர். அதிலும் சல்மானைவிட சோகைல்கான் தான் அர்பிதாவின் ஃபேவரைட் அண்ணனாம்.

லண்டன் காஹேஜ் ஆப் பேஷன் கல்லூரியில் பேஷன் மார்க்கெட்டிங் மற்றும் மேலாண்மை படித்த அர்ப்பிதாவுக்கு அவரது காதலன் ஆயுஷ் ஷர்மாவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

சல்மான்கான் 1965ம் ஆண்டு டிசம்பரில் பிறந்தவராகும், ஆனால் அர்பிதா 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தவர். இதுதான் வயது வித்தியாசத்திற்கான காரணம்.


show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ஜப்பானில் மூதாட்டி ஒருவர் தனது ஆறு கணவர்களைக் கொலை செய்ததாக பொலிசார் சந்தேகிக்கின்றனர். ஜப்பானை சிஸாகோ காகேஹி (Chisako Kakehi ...மேலும் வாசிக்க
ஜப்பானில் மூதாட்டி ஒருவர் தனது ஆறு கணவர்களைக் கொலை செய்ததாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

ஜப்பானை சிஸாகோ காகேஹி (Chisako Kakehi Age-67) என்ற மூதாட்டி கடந்த 20 ஆண்டுகளாய் 6 பேரை மணமுடித்து கொலை செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்ட நபர் ஒருவர், தற்போது இறந்ததால் பொலிசாருக்கு சந்தேகம் வந்துள்ளது.

பிரேத பரிசோதனையில் அந்நபரின் உடலில் சைனைட் இருந்ததை உறுதிப்படுத்தியதையடுத்து, சிஸாகோ வீட்டில் பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் சிஸாகோவிடம் நடத்திய விசாரணையில் அவர் தன் கணவரின் காப்பீட்டு பணத்தை அபகரப்பதற்காக இந்த கொலையை செய்திருக்கலாம் என்றும் இதே நோக்கத்திலேயே இதற்கு முன்பு அரங்கேற்றி இருக்கலாம் எனவும் பொலிசார் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பான வழக்கு, தலைநகர் டோக்கியோ (Tokyo) நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஆனால் இந்த மூதாட்டி தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


ருத்ரய்யா.....  ஒரு சிறந்த இயக்குனர் காலத்தால் அழியாத பெயரெடுக்க ஒரேயொரு படம் எடுத்திருந்தால் ...மேலும் வாசிக்க
ருத்ரய்யா..... ஒரு சிறந்த இயக்குனர் காலத்தால் அழியாத பெயரெடுக்க ஒரேயொரு படம் எடுத்திருந்தால் கூட போதும் என்பதற்கு மௌனசாட்சியாய் இந்த வாரம் வரை வாழ்ந்துவந்த‌ இயக்குனர் ருத்ரய்யா இப்பொழுது உயிருடன் இல்லை...... தமிழ் சினிமாவுக்கு இவரது இழப்பு முழுமையாக 1980லேயே ஏற்பட்டுவிட்டதினால் இப்போது அது இறுதியாக ஒருமுறை ஊர்ஜிதமாகியிருக்கிறது அவ்வளவுதான்..... ஆனாலும் ரசிகர்களுக்கு இவர் இயக்கிய 1978 ல் வெளிவந்த "அவள் அப்படித்தான்" படம் பார்த்திருந்தால் இவரின் இந்தப் பிறவியை வெறும் இரண்டு திரைப்படங்களுடன் இழந்துவிட்டது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை உணரலாம்.......

சிலரை உலகம் "அவர் அல்லது அவள் அப்படித்தான்" என்று முடிவுசெய்து தீர்ப்பு வழங்கிவிடும் அப்படியான முடிவுகள் ஒன்று விதிகளைத் தளர்த்திக்கொள்ளும் ஒரு தனிப்பட்ட சலுகையாகவோ அல்லது ஒட்டுமொத்த புறக்கணிப்பாகவோ அமைந்துவிடும்.....


"அவள் அப்படித்தான்" , "கிராமத்து அத்தியாயம்" என்ற இரண்டு படங்களை இயக்கிவிட்டு திரையுலகைவிட்டு ஒதுங்கிக்கொண்டவர் இன்று 34 ஆண்டுகள் கழித்து நிலவுலகைவிட்டும் நீங்கிச்சென்றிருக்கிறார்.......  ஏன் அவர் மூன்றாவது படம் எடுக்கவில்லை? என்பதற்குத் தெளிவான காரணமெதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்று நினைக்கிறேன்..... கேட்டால் ஒருவேளை சொல்லுவார்கள் "அவர் அப்படித்தான்" என்று!


"அவள் அப்படித்தான்" [A]  (1978)

"அன‌ந்துவுக்கு...." என்ற ஒற்றை வார்த்தை சமர்ப்பணத்துடன் தொடங்கும் இந்தப் படம் மனிதர்களின் பல்வேறு நிறங்களை அப்படியே தனக்குள் அள்ளிக் கொண்டுவந்து சேர்த்த ஒரு  "கலர்ஃபுல்" கருப்புவெள்ளைத் திரைப்படம்!

படம் துவங்கியதுமுதல்  முடியும் வரை "அப்படியே" இருக்கும் அந்த "அவளின்"திரைப்பெயர் மஞ்சு நிஜப்பெயர் ஸ்ரீப்ரியா! தன்னையும் மஞ்சுவையும் திரையில் ஒரு கணம் கூட பிரித்துப்பார்க்க அனுமதிக்கவில்லை ஸ்ரீப்ரியா..... எளிமையாக "மஞ்சுவாக ஸ்ரீப்ரியா வாழ்ந்திருக்கிறார்" என்ற அந்த க்ளிஷே வரியை உபயோகிக்கலாம்தான் ஆனால் அதையெல்லாம் தாண்டியதாய் அமைந்திருக்கிறதே ஸ்ரீப்ரியாவின் இந்த "மஞ்சு" அவதாரம்!

அழகான மஞ்சுவை அணுகுவது கடினம்.... காரணம் அவளைச் சுற்றி அவளே அமைத்துக்கொண்டிருக்கும் நெருப்பு வளையங்கள்!..... காரணம் ஆதரவற்ற நிலையில் ஓர் அழகான பெண் இருந்தால் அவளுடன் உறவைப் பகிர்ந்துகொள்வதைவிட உணர்வுகளுக்காக உபயோகப்படுத்திக்கொள்ளத்தானே அல்லாடும் ஆண்மனம்!

மஞ்சுவின் தாயின் நடத்தையின் அசுத்தம் ஊருக்கே வெளிச்சம் அந்த வெளிச்சத்தில் நிர்வாணமாய்க் கூனிக்குருகும் அவள் கணவன்..... இந்த ஓட்டைகளுக்குள் நுழைந்து, அறிந்தும் அறியாமலும் அல்லாடும் மஞ்சுவிடம் அத்துமீற "மாமன்" ஒருவன் எத்தனிக்கும்போது மஞ்சு பள்ளிமாணவி!

" நேத்து உங்க அம்மாகூட ஒருத்தர் வந்தாரே.... உயரமா.....குண்டா.....அவரு யாரு உங்க அப்பாவா??" என்று பதில்தெரிந்துகொண்டே நக்கலாகக் கேட்கும் உடன்பயிலும் மாணவிக்கு மௌனத்தைப் பதிலாகத் தந்து நகரும் மஞ்சுவின் பிஞ்சுமனம் மேலும் மேலும் அவமானங்களாலும் அத்துமீறல்களாலும் இறுகிப்போன‌ கடினமான ஸ்ரீப்ரியாவாக  மொத்தப்படத்திலும் உலவவிட்டிருப்பார் ருத்ரய்யா,.....!

ஆவணப்பட இயக்குனர் அருணாகக் கமல்ஹாசன்! ஆங்கிலத்தில் genuine என்ற வார்த்தைக்கு synonymous படத்தில் கமல்! தனது தொழில், காதல் உட்பட எல்லாவற்றிலும்! மஞ்சு பணிபுரியும் விளம்பரக் கம்பெனியின் பாஸ் ரஜினி! "டேய் மாப்புள......" என்று படு அலட்சியமாகத் துவங்கிக் கமலுக்கு வாழ்க்கையைப் பற்றியும் முக்கியமாகப் பெண்களைப் பற்றியும் அவ்வப்போது பாடம் எடுக்கும் ஒரு திறந்த புத்தகம் ...... தன் இளமைக்கு இணையாக‌ இன்பத்தை நிறுத்தித் தானே சரியென்று வாழும் Casual இளைஞன் ரஜினி!ஆவணப்படம் எடுக்கவரும் தன் நண்பன் கமலுக்கு உதவிவாக இருக்கச்சொல்லி ஸ்ரீப்ரியாவைக் கமலுக்கு அறிமுகம் செய்துவைப்பார் ரஜினி!

கமலின் ஆவணப்படத்துக்கான ஆராய்ச்சிப் பொருள் "பெண்கள்"!  கிட்டத்தட்ட‌ முப்பதாண்டுகால முற்போக்கான பளிச் பளிச் வசனங்கள்தான் அன்று இந்தப்படம் புறக்கணிக்கப்பட்டதற்கும் இன்றும் நிலைத்து கம்பீரமாய் நிற்பதற்கும் ஒற்றைக் காரணம்!

"இந்த படமெடுக்குறதுல நல்ல பணம் கிடைக்கும்ல......" என்று ஸ்ரீப்ரியா கமலுடன் ஒரு காஃபி உரையாடலில் மேம்போக்காகக் கேட்பார்...... முகம் சிவக்கும் கமல், "பணம் பண்ணுறது மட்டும் என்னோட நோக்கமில்ல...." என்று அழுத்தமாக ஆரம்பிக்கும்போதே சட் டென்று ஸ்ரீப்ரியா "இப்படி வித்தியாசமாத் தன்னைக் காட்டிக்கிறது ஒரு ஃபேஷன்..!" என்று உரையாடலை முள்தைத்து முடித்துவைப்பார்!

வீட்டுக்கு வந்த ஸ்ரீப்ரியாவை "காஃபி சாப்பிடுறீங்களா?" என்று கமல் கேட்கும்போது "வேற என்ன பண்றது சொல்லுங்க....." என்று ஸ்ரீப்ரியாவை அஸால்டாகக் கேட்கவிட்டு அடுத்த ஃப்ரேமில் கையில் காஃபியுடன் சீன் வைத்திருப்பார் ருத்ரய்ய்யா.....!

எதிரில் அமர்ந்திருக்கும் கமலின் உணர்வுகளைத் தன் கூர் வார்த்தைகளால் படு ஈஸியாகக் காயப்படுத்தும் ஸ்ரீப்ரியாவுக்குத் தக்க பதிலைக் கொடுக்க கமலின் உதடுகள் துடித்திடும் ஆனால் அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் மைக்ரோசெகண்டில் அந்த உரையாடலையே முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவார் ஸ்ரீப்ரியா...... மெதுமெதுவாகக் கமல் ஸ்ரீப்ரியாவைப் புரிந்துகொண்டு காதலிக்க ஆரம்பித்தாலும் கமலுடன் சேர்ந்து பார்வையாளர்களுக்கும்கூட எளிதில் புலப்படாது கமல் குறித்த ஸ்ரீப்ரியாவின் மனவோட்டம் எப்படிப் போகுமென்று...... அதுவரை சில மின்னல் வசனங்களை அவ்வப்போது சப்ளை செய்துகொண்டே இருப்பார் ருத்ரய்யா பார்வையாளனின் புன்சிரிப்புக்காக!

ஒரு சீனில் கமலும் ஸ்ரீப்ரியாவும் ரோட்டில் நடந்து செல்லும்போது கமல் சொல்லுவார், " நம்ம ரெண்டுபேரும் ஒண்ணா நடந்துட்டுவந்தாலும் நீங்கமட்டும் தனியாவர்ற மாதிரி இருக்கு" இது சாதாரணமான வசனம்தான் என்றாலும் ஏதோ காரணத்துடன் டல்லாக இருக்கும் மஞ்சுவைப் பேசவைக்கக் கமல் எடுக்கும் பிரயத்தனமாகக் கமல் தவிப்புடன் டெலிவர் செய்யும் விதம் அத்தனை இதமாக இருக்கும்!

கமலின் ஆவணப்படத்துக்காகக் குட்டிபத்மினியைப் (படத்தின்படி அவர் ஒரு க்ளாமர் நடிகை) பேட்டியெடுப்பார்கள்...... "இப்படி ஆடியன்ஸுக்காக அதிலும் குறிப்பாக ஆண்களுக்காக இப்படி மேக்-அப், க்ளாமரான ஆடை போட்டுக்கறது உங்களுக்கு ஒரு மாதிரி அடிமைத்தனமா தெரியலயா?" என்று கமல் கேட்க.... அலட்டிக்கொள்ளாமல் பதில்வரும் நடிகையிடமிருந்து. "மிஸ்டர், அருண் உங்களுக்கு நிறைய நேரம் இருக்குதுபோல..... இவ்ளோயெல்லாம் யோசிக்கிறீங்க?? (லேசான சிரிப்புடன்) இதோ இப்போ ஒரு குடும்பப்பெண் வேடம் ஈவ்னிங் அடுத்த ஷூட்டிங்ல அப்படியே ஆப்போஸிட்.... ப்ராஸ்டிடியூட் வேஷம்.... யோசிக்கவெல்லாம் டைம் இல்ல...." இப்படி யதார்த்தங்களை அளவுகோலாக வைத்துப்பார்த்தால் படம் வந்த சமகாலத்து கே.பாலசந்தர் படங்கள்கூட முற்போக்கில் அவள் அப்படித்தானுடன் மிகவும் தள்ளித்தான் நிற்கமுடியும்.... ஆனால் அப்போது அதனை "ஆபாசம்" என்று தள்ளிவைத்துவிட்டோம்..... நாமெல்லாம் கண்ணகி மைந்தர்கள் ஆயிற்றே! இப்பொழுது ருத்ரய்யாவை வியந்தும் "அவள் அப்படித்தான்"-ஐக் கொண்டாடி எழுதும் விகடனாரே அப்போது இந்தப் படத்துக்குப் போட்ட மார்க்கையும் எழுதிய விமர்சனத்தையும் படித்தால் விழுந்து சிரிக்கலாம் அந்த நிறமாற்றத்தைப் பார்த்து!

ருத்ரய்யா சாகாவரம்பெற்று நிமிர்ந்து நிற்பது மஞ்சுவின் பாத்திரப்படைப்பில்தான்! மேலுக்கு அவள் ஏதோ மிகக்கடினமான வித்தியாசமான பெண் போலத் தோற்றமளித்தாலும், ஒரு சாதாரணப்பெண்ணின் தவிப்புகளும் தன்மீது விழும் துச்சாதன விமர்சனங்களுக்கு அவளுக்கு எழும் சீற்றங்களும் அனைத்துமே அப்படியே அசலாக நாம் சாதரணமாக உடன்வாழும் பெண்மைகளைத்தான் பறைசாற்றும்! ஆனால் அவளது பேச்சுக்களும் மிகமிக மெச்சூர்டாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் நடவடிக்கைகளும் அவளாக உருவாக்கிக்கொண்ட வெறும் செயற்கை அரண்கள்தான் என்பது பார்வையாளனுக்குத் தெளிவாகத் தெரியும்,....... ஒரு பெண்ணின் insecurity-யை இத்தனை நெருக்கமாக விளைவுகளுக்கும் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அவளின் தயாரிப்புளுக்கும் மையம்வைத்து உருவாக்கிய ஒரு படைப்பை அவ்வளவு எளிதாகத் தமிழில் கூகுளால் கூட கண்டுபிடித்து சொல்லிவிடமுடியாது!

மஞ்சுவைக் கமல் திருமணம் செய்துகொண்டால் ஒரு குடும்பஸ்த்ரியாக எப்படி இருந்திருப்பாள் என்று படத்தின் நடுவே ஒரு நிமிடம் Pause போட்டு சிந்தித்தால் நிச்சியமாக ஒரு பாங்கான சராசரி குடும்பப்பெண்ணாக அருமையான ஒரு மனைவியாகத்தான் மஞ்சு இர்ந்திருப்பாள் என்றுதான் மனது சொல்லும் இத்தனைக்கும் ஒரு கே.பி பட ஹீரோயினைவிட நூறுமடங்கு அதிகமாக புரட்சியும் சுதந்திரமும் பேசும் பாத்திரம் இது..... சில பவர்ஃபுல் காட்சிகளால் மஞ்சுவின் இத்தனை மெனக்கிடல்களையும் மீறி அவளையும் ஒரு Girl Next Door -ஆக‌ப் பார்வையாளனின் மனதில் நிலை நிறுத்தியதைத்தான் ஒவ்வொருமுறை இந்தப் படம் பார்க்கும்போதும் ருத்ரய்யாவை வியந்து, கமலைப் போலவே நானும் மஞ்சுவைக் காதலிக்கிறேன் மௌனமாக.......!

தவறான நபர்களிடம் காதலித்து ஏமாற்றத்தையும் அருவருப்பையும் சம்பாதித்துக்கொண்ட விரக்தியில், மஞ்சு தான் தேடுவதும் ஒரு நல்ல துணையைத்தான் என்பதை அவளுடன் நெருக்கமாகப் பழகும் தோழிக்கோ, அவளைப் பற்றி மிகத் தீர்க்கமான ஒரு புரிதலில் இருக்கிறோம் என்று நம்பும் ரஜினிக்கோ ஏன் அவளை அப்படியே ஏற்றுக்கொண்டு அவளாகவே அவளைக் காதலிக்கும் கமலுக்கே கூடப் புரியாதவாறு தான் உருவாக்கிக்கொள்ளும் சிக்கலான இமேஜில் தானே சிக்குண்டு பொக்கிஷமாகக் கிடைத்த ஒரேயொரு துணைவனையும் இழந்து தூரத்தில் தனியாக நிற்பாள் மஞ்சு அந்தக் கடைசி காட்சியில்.......

முதலில் கூறியவாறு பார்வையாளனும் கமல்ஹாசனும் மஞ்சுவின் தேவை மற்றும் காதல் பற்றிய நிலைப்பாடில் ஒரேமாதிரியான‌ குழப்பமான மனநிலையில் இருப்பதாகச் செல்லும் திரைக்கதையில் ஒரு பகுதியில் பார்வையாளன் மஞ்சுவின் "சாதாரணத்தை"ப் புரிந்துகொண்டு அவளின் அடிமனதில் கமல்மீது தோன்றும் காதலையும் எளிதாக உணரத் துவங்கிவிடுவான் ஆனால் கமலுக்கு அது இறுதிவரைக்கும் குழப்பமாகவே மிஞ்சிவிடுவதுதான் இந்தத் திரைக்கதையின் யதார்த்த மந்திரம்!

திரைக்கதையைவிட அதி நவீனமானது இந்தப் படத்தின் ஒளிப்பதிவு...... ஒரு கருப்பு-வெள்ளைப் படத்தில் கேமரா இவ்வளவு விளையாடமுடியுமா?? என்று கர்ணன், பி.எஸ். லோக்நாத், அஷோக்குமார் போன்ற ஜித்தர்களைப் பார்த்து மிரண்டிருக்கிறேன் ஆனால் இந்தப் படத்தில் நல்லுசாமி-ஞானசேகரன் கேமராவைக் கையாண்டிருக்கும் கோணங்களும் வண்ணங்கள் இல்லாமலேயே க்ரியேட் செய்யும் மூட்-களும் அபாரமானவை...... பெரும்பாலும் க்ளோஸ்-அப் கள்தான் ஆனாலும் ஒன்றுக்கொன்று அதிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பெர்ஃபார்மன்ஸையும் சரி உணர்வுகளையும் சரி நேரடியாக முழுவதுமாக அள்ளிக்கொண்டேயிருக்கும்!

நடிப்பு என்று சொன்னால்........ ஸ்ரீப்ரியாவின் நடிப்பை ஏற்கெனவே சொல்லிவிட்ட்டேன் முழுமையாக என்னால் எழுதிவிடமுடியாவிட்டலும்! கமலிடம் இந்தப் படத்தில் மிக அதிகமாக ரசித்தது........ ரஜினியிடமும் ஸ்ரீப்ரியாவிடமும் உரையாடல்களில் நேர்மாறான கருத்துகள் கொண்டவராகத்தான் அநேகக் காட்சிகளில் கமல் இருப்பார் ஆனாலும் அவர்கள் இருவரும் எதிர்மறைக் கருத்துகளைக் கேட்பவர்களே இல்லை பாத்திரப்படைப்புகளில்! தனது கருத்து முரண்பட்ட நிமிடத்திலேயே பேச்சை இருவரும் முடித்துக்கிளம்பிவிடுவார்கள்..... அப்போது அந்த ஒவ்வொரு சீனிலும் அடுத்து தான் பேச வேண்டிய பத்துவரி வசனத்தைத் தனது ஒற்றை முகபாவத்தாலேயே பேசுவார் கமல்..... நிறைய சீன்களில் கமலிடமிருந்து வெளிப்படும் இந்த மௌன நடிப்பு வெகுவாகக் கவரும்........!

ரஜினியின் தெளிவான படு இயல்பான நடிப்பு படத்திற்கு பெரும்பலம்....... "நேச்சுரல் ஆக்டிங்"கில் இந்திய சினிமாவுக்கு ஒரு மாபெரும் முன்னோடி ரஜினிகாந்த் ஆனால் ஸ்டைலுக்காக மட்டுமே நினைவுகூரப்பட்டுவருகிறார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக! இந்த ஆதங்கம் எழுவதைத் தவிர்க்கமுடியாது இந்தப் படம் பார்க்கும்போது! ரஜினியின் ஸ்டைலும் வேகமும் இந்தப் படத்தில் அவர் ஏற்றிருக்கும் தியாகு கதாபாத்திரத்தை மெருகேற்றியிருக்கும் பாங்கினையும் பார்த்துப் பார்த்து ரசிக்கலாம்! சில காட்சிகளில் நன்றாகப் பயன்படுத்தியிருப்பார் ருத்ரய்யா.....!

இன்னொரு முக்கியமான ஆட்ட நாயகன் இளையராஜா! மஞ்சுவின் ஆழத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்ட இன்னொரு ஜீவன் இளையராஜாவாகத்தான் இருக்கமுடியும் அத்தனை தேர்ந்த இசையை வழங்கியிருப்பார்..... "உறவுகள் தொடர்கதை...." ஒரு பாடல்போதும் இளையராஜாவின் இத்தனை சிரத்தையான இசையமைப்பை சர்வசாதாரணப் படங்கள் அத்தனை எளிதில் பெற்றிடமுடியாது அனுபவித்து இசை வழங்கியிருப்பார் பெரும்பான்மை மௌனங்களுடன்!

நான் ருத்ரய்யாவின் இரண்டாவது படமான "கிராமத்து அத்தியாயங்கள்" பற்றி அதிகம் கேள்விப்பட்டதுகூட கிடையாது..... ஒரு பத்து ஆண்டுகளுக்குமுன்பாக விகடனில் அவரது பேட்டி ஒன்றைப் படித்தேன்.... ஒரு பிடிவாதக்காரராக அடையாளம் காட்டப்பட்டிருந்தார்........ அவரது பேச்சும் விடாப்பிடியாகத்தான் தெரிந்தது...... ரஜினி-கமல்.... அஜித்... விக்ரம் வரை அவரின் பார்வை பதியப்பட்டிருந்தது அந்தப் பேட்டியில் அதன்பிறகு அவரது மரணச்செய்தியைத்தான் கேள்வியுற்றேன்.......

ருத்ரய்யாவின் இந்தப் பிறவியில் அவர் எடுத்திருப்பது இரண்டே படங்கள்தான் என்றாலும் "அவள் அப்படித்தான்" அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும் ஒரு தமிழ்ப்படமாக இருக்கும்!

இந்தப்படத்தை ஒரு ஜப்பான் அல்லது கொரிய மொழியில் டப் செய்து சப்-டைட்டிலுடன் வெளியிட்டிருந்தால் நம்மவர்கள் கொண்டாடிப்பார்த்திருப்பார்கள் ஓர் உலகசினிமாவாக........!


ருத்ரய்யாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளுடன்......

பிரபு . எம்


கருத்துரை கொடுத்து எழுத்துக்களை மெருகேற்றலாமே....

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மதுரை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த, இப்போது வாகை சந்திரசேகர் என்று பெயர்மாற்றம் செய்துகொண்ட சந்திரசேகர், தமிழ்சினிமாவில் முக்கிய நாயகன்களில் ஒருவராக வருவார் ...மேலும் வாசிக்க
மதுரை மாவட்டம் வாகை குளத்தைச் சேர்ந்த, இப்போது வாகை சந்திரசேகர் என்று பெயர்மாற்றம் செய்துகொண்ட சந்திரசேகர், தமிழ்சினிமாவில் முக்கிய நாயகன்களில் ஒருவராக வருவார் என்று அவர் நடிக்க வந்த ஆரம்பத்தில் பலரும் எதிர்பார்த்தார்கள். தனது நடிப்புலக வாழ்க்கையின் ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் எல்லாமே அக்கால கட்டத்திற்கு புதுமையான களனைக் கொண்ட படங்கள். அவற்றில் பல வணிகரீதியான வெற்றியைப் பெற்றவை மற்றும் பொதுமக்களிடம் சென்று சேர்ந்தவை. ஆனால் சில ஆண்டுகளிலேயே அவர் சிறு வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் படங்களில் நடிப்பது படிப்படியாக குறைய ஆரம்பித்தது.  இப்படி எதிர்பார்க்கப்பட்ட ஒருவர் தமிழ்சினிமாவில் நிலைக்க முடியாமல் போவதற்கு பல காரணங்கள் இருக்கும். ஆனால் சந்திரசேகருக்கு அவரின் மீது விழுந்த முத்திரைகள் முக்கிய காரணமாய் அமைந்தது.

தமிழ்சினிமாவில் ஒருவருக்கு முத்திரை குத்துவது என்பது சகஜமான ஒன்று. தங்கை வேடம், நண்பன் வேடம் ஆகியவற்றை ஏற்றவர்கள் அதிலிரிருந்து வெளியேற பிரம்ம பிரயத்னம் செய்யவேண்டும். நாயகன், சத்யா படங்களில் நடித்த ராஜா கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டி அப்போது நடித்து வந்த படங்களில் எல்லாம் இறந்து போவதுபோலவே காட்சி அமைப்பு இருக்கும். ஒருமுறை அவர் ஷூட்டிங்கில் இருந்து திரும்பிவரும் பொழுது, அவருடைய மகன் “அப்பா, இந்தப் படத்தில் நீங்கள் எப்படி சாகப்போகிறீர்கள்” என்று கேட்டாராம். கமலா காமேஷ் என்றாலே வயதான ஏழைப் பெண், தலைவாசல் விஜய் என்றாலே குடிகாரர் என்று இயக்குநர்களே முன்முடிவுடன் தான் இங்கே சிந்திப்பார்கள்.

ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட முத்திரை வாங்கியவர்கள் தமிழ்சினிமாவில் வெகு சிலரே. அவர்களுள் ஒருவர் சந்திரசேகர்.

70களின் இறுதியிலும், 80களின் ஆரம்பத்திலும் வந்த, அப்போதைய காலகட்டத்திற்கு புது முயற்சியான படங்கள் எல்லாவற்றிலும் சந்திரசேகர் பிரதான பாத்திரமாக இருந்தார். பாரதிராஜாவின் இயக்கத்தில் புதிய வார்ப்புகளில் அறிமுகமான சந்திரசேகர் நிழல்கள், கல்லுக்குள் ஈரம், சுமை, ஒருதலை ராகம், பாலைவனச்சோலை, சிவப்பு மல்லி என தொடர்ந்து அந்த நேரத்தில் புது கதைக்களமாக இருந்த படங்களில் எல்லாம் அவர் நடித்தார்.

இந்த படங்களில் நடித்த போது, அவருக்கு மூன்றுவகையான முத்திரைகள் குத்தப்பட்டது. இதுபோக கலைஞரின் வசனத்தில் உருவான “தூக்கு மேடை” படத்தில் நடித்த போது இன்னுமொரு முத்திரை குத்தப்பட்டது. சோகம் என்றவென்றால் இந்த முத்திரைகளில் இருந்து இந்த 35 ஆண்டுகளாக அவரால் மீண்டுவரவே முடியவில்லை.
முதல் முத்திரை என்பது தியாகம்/உதவி செய்யும் நண்பன் என்னும் கேரக்டர்.  சந்திரசேகர் என்றாலே ஒரு சோகமயமான, உயிர்கொடுக்கும், உதவும் நண்பன் என்ற பிம்பம் இயக்குநர்களுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கே உண்டு. அவர் நடிக்க ஆரம்பித்த காலம் தொட்டு, இப்போதுவரை அந்த கேரக்டர் அவருடனேயே தொடர்ந்து வருகிறது. ஊமை விழிகள், செந்தூரப்பூவே, ஜெய்ஹிந்த் என அது தொடர்கதையாகவே வருகிறது. இதற்கெல்லாம் மகுடமாக 2002ல் வெளிவந்த சார்லி, சந்திரசேகர் இணைந்து நடித்த ”நண்பா நண்பா” வில் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசியவிருது கிடைத்தது. இந்தப் படத்திலும் நட்புதான் பிரதானம். ஒரே வித்தியாசம், சந்திரசேகருக்காக சார்லி நிறைய தியாகம் செய்வார்.

இன்னொரு முத்திரை இவர் ஒரு கம்யூனிசவாதி என்பது. இவர் ஆரம்பத்தில் நடித்த சுமை, சிவப்பு மல்லி, பட்டம் பறக்கட்டும் ஆகியவற்றால் இந்த முத்திரை கிடைத்தது. சுமை படத்தில் ஏழைக் குடும்பத்தை காப்பாற்ற போராடும் மூத்த மகன், சிவப்பு மல்லியில் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடும் மில் தொழிலாளி, பட்டம் பறக்கட்டும் படத்தில் வேலை இல்லா பட்டதாரி. இந்த படங்கள் கொடுத்த பாதிப்பால், அநியாயத்துக்கு எதிராக போராடி அநியாயமாக அடிவாங்கும்/சாகும் கேரக்டர்களில் எல்லாம் சந்திரசேகருக்கு இயக்குநர்கள் வாய்ப்பளித்தார்கள். மணிவண்ணன் இயக்கிய முதல் வசந்தம், கோமல் சுவாமிநாதனின் கதையில், சிவகுமார் நடித்த “இனி ஒரு சுதந்திரம்” போன்ற படங்களில் நடித்தார். சிவப்பு மலர்கள், சிவப்பு நிலா என அவர் நடித்த படங்களின் டைட்டில் கூட சிவப்பாகவே இருந்தது.
ஒண்ணு படத்துல சிவப்பு இருக்கும் இல்லையின்னா அவர் உடம்புல இருந்து சிவப்பு ரத்தம் வெளிய வரும் என்று என்னும் அளவுக்கு அவரின் பெரும்பாலான படங்கள் இருந்தன.

இவையெல்லாம் கூட பரவாயில்லை. மூன்றாவது முத்திரைதான் அவரை இன்றுவரை அலைக்கழித்துக் கொண்டே இருக்கிறது. அதுதான் நடுத்தர வர்க்க/ஏழை கேரக்டர். நண்பனின் கேரக்டரில் கூட பணக்கார நண்பன் என்னும் வெரைட்டியில் சிலர் தப்பி விடுவார்கள். பணக்காரராய் இருந்து கம்யூனிசம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சந்திர சேகருக்கு தமிழ்சினிமா முத்திரை குத்திய இந்த கேரக்டர், அதுவும் லோ-பட்ஜெட் படங்களுக்கே செதுக்கி வைத்தாற்போன்ற கேரக்டர், அது அவருக்கு மட்டுமே செப்புப் பட்டயத்தில் கொடுக்கப்பட்ட ஒன்று. இந்த முத்திரையால், அவர் சிறு/குறு முதலீட்டுப்படங்களிலேயே நடிக்க முடிந்தது.

எத்தனை படங்கள்?. இதுவரை சந்திர சேகர் நடித்துள்ள படங்களில் 99 சதவிகிதம் படங்கள் சிறு/குறு முதலீட்டுப் படங்கள் தான். ராம நாரயணன். விசு, சங்கிலி முருகன் என 80களில் சிறு முதலீட்டுப் படங்களை எடுத்து குவித்தவர்கள், முதலில் பிலிம் வாங்குவார்களோ இல்லையோ சந்திரசேகரின் கால்ஷீட்டை வாங்கிவிடுவார்கள். ஊமை விழிகள், செந்தூரப் பூவே தவிர்த்துப்பார்த்தால் எல்லாமே சிறு முதலீட்டுப் படங்கள் தான். அர்ஜூன் இயக்கிய ஜெய்ஹிந்த் ஒரு மீடியம் பட்ஜெட் படம். கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த “மகராசன்” கூட ஒரு லோ-பட்ஜெட் படம்தான்.

சம்சாரம் அது மின்சாரம், அவள் சுமங்கலிதான், சகல கலா சம்மந்தி, பெண்கள் வீட்டின் கண்கள் என விசுவின் படங்கள், சுமையில் தொடங்கி சிவப்பு மல்லி, நாகம் (தயாரிப்பு : இராம நாராயணன், இயக்கம் : சோழ ராஜன்) துர்கா வழியாக ராம நாராயணனின் 100 வது படமான “திருப்பதி ஏழுமலை வெங்கடேசா” வரை  ராம நாராயணனின் பெரும்பாலான படங்கள். சங்கிலிமுருகன் தயாரித்த படங்கள், ஏன் இப்பொழுதுகூட மாஞ்சா வேலு வரை சிறு முதலீட்டுப் படங்கள்தான்.
சந்திரசேகரும் வெவ்வெறு கேரக்டர்களும் அவ்வப்போது முயற்சித்துப் பார்த்தார். ஆனால் அவை அவ்வளவாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சந்திரசேகர் நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்த படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். கனம் கோர்ட்டார் அவர்களே படத்தில் ஒரு நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்தார். கடந்த சில ஆண்டுகளில் சேனா படத்தில் அப்படி ஒரு கேரக்டரிலும், மாஞ்சா வேலு படத்தில் பிரதான வில்லனாக நடித்தார். கரகாட்டக்காரனில் நெகட்டிவ்வாக இருந்து திருந்திவிடும் பாத்திரம். சந்திர சேகரை வில்லனாக யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதேபோல சந்திரசேகரை காதலன் கேரக்டரிலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாலவனச் சோலை வரை அவரது முகத்தில் ஒரு ஷைனிங் இருந்தது. அது நாளாக நாளாக குறைந்துவிட்டது. இல்லம் படத்தில் ஒரு ரொமாண்டிக் இன்ஸ்பெக்டர் வேடம். அமலாவை காதலிப்பது போல். அவர் முகத்தில் காதலைத் தவிர எல்லா உணர்ச்சிகளும் வந்தன.

இந்த முத்திரை மட்டும் குத்தப்படாமல் இருந்தால், விஜயகாந்த்துக்கு அடுத்த நிலையில் ஒரு மினிமம் கேரண்டி கமர்சியல் ஹீரோவாக சந்திரசேகர் வந்திருக்கலாம்.

80களில் விஜய் அமிர்தராஜ், ஆனந்த் ராஜ், ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் டென்னிஸ் விளையாடிய காலங்களில் ஒரு வெளிநாட்டு விளையாட்டு விமர்சகர் சொன்னார், “இந்தியர்கள் ஒரு நல்ல போர் ஹேண்ட் ஷாட்டோ அல்லது நல்ல  பேக் ஹேண்ட் ஷாட்டோ அடித்துவிட்டால் போதும். ஒரு நாற்காலி போட்டு அதைத் தாங்களே ரசித்துவிட்டுத்தான், அடுத்த ஷாட் விளையாடுவார்கள். ஆனால் மற்ற நாட்டினரோ அடுத்த ஷாட்டை எப்படி ஆடுவது என்ற சிந்தனை மற்றும் செயலில் இறங்கிவிடுவார்கள்.” இதனால் தான் இந்தியர்களால் அதிகமான வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை என்பார். அந்த கால கிரிக்கெட் அணி, ஏன் ரசிகர்கள் கூட அப்படித்தான். செமி-பைனல் போனா போதும் என்பார்கள். இந்த மனநிலை பெரும் பாலோனோர்க்கு அவ்வாறே இருந்தது.

சந்திரசேகரும் அப்போதைய இந்த மனநிலைக்கு விதிவிலக்கு பெற்றவர் அல்ல. கிராமத்தில் இருந்து நடிப்பதற்காக வந்தோம். கஷ்டப்பட்டு நாடக வாய்ப்பு பெற்றோம், பாரதிராஜா மூலம் அறிமுகமானோம், நான்கைந்து வெற்றிப்படங்களில் நாயகனாக நடித்துவிட்டோம். இது போதும் என்று நினைத்திருக்கக் கூடும். தொடர்ந்து சிறு முதலீட்டுப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்கவும், கதை, தன்னுடைய வேடம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் கேட்டவர்களுக்கெல்லாம் கால்ஷீட் கொடுத்து நடித்திருகிறார். தன்னுடைய அடுத்த கட்ட உயர்வு என்னவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலேயே.

மருமகளே வாழ்க, இனிமை இதோ இதோ, வீட்டுக்காரி, பூம் பூம் மாடு, அர்ச்சனைப் பூக்கள் என குறு/சிறு முதலீட்டுப் படங்களிலேயே நடித்தார். மூன்றே வருடங்களில் ஒரு ஹீரோ என்ற அந்தஸ்தை இழந்து துணை நடிகர் என்ற கேட்டகிரிக்கி மாறினார். சந்திரசேகர் துணை வேடங்களில் நடித்த சம்சாரம் அது மின்சாரம், ஊமை விழிகள், கரகாட்டக்காரன் போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றதால் துணை நடிகர் என்ற முத்திரை அழுத்தம் திருத்தமாக விழுந்தது.

ஹீரோவாக இருந்து, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்ஸாக மாறியபின்னர், ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்த வாய்ப்புகளும் அவருக்கு குறையத் தொடங்கின. அரசியலில் ஏதாவது ஒரு நிலையை நாம் எடுத்துத்தான் ஆகவேண்டும்.ஆனால் சினிமாவில் எல்லாத்தரப்பிலும் இருப்பதே கேரக்டர் ஆர்டிஸ்ட்களுக்கு நல்ல வாய்ப்புகளுக்கு உத்திரவாதம் கொடுக்கும். சந்திரசேகர், கருணாநிதி வசனத்தில் தூக்குமேடை படத்தில் நடித்தபிறகு பரவலாக திமுக சார்புடையவராக அறியப்பட்டார். கட்சியிலும் இணைந்தார்.

நடிக்க வந்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளராக போட்டியிட்டார். உண்மையில் அந்த 20 ஆண்டுகளும் அவர் திமுககாரராகவே பார்க்கப்பட்டார். திமுக சார்பு திரைப்படங்கள், திமுக பிரமுகர்கள் தயாரித்த/இயக்கிய பெரும்பாலான படங்களில் அவர் நடித்தார். இதனால் மாற்றுக் கட்சியினர் தயாரிக்கும்/பங்குபெறும் படங்களில் அவருக்கு ஏற்ற நல்ல வேடங்கள் இருந்தாலும் அதைப் பெறும் வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை.
சந்திர சேகரின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான அம்சம், அவர் தொடர்ந்து சிலருடன் பணியாற்றியதுதான். ராம நாராயணன், விசு, ஆர் சி சக்தி போன்ற இயக்குநர்களுடனும், பிரபு, விஜயகாந்த், கார்த்திக் போன்ற ஹீரோக்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார். இது சாதகமான அம்சம் என்றாலும், மற்ற புதிய இயக்குநர்கள்/நடிகர்கள் இவரை அழைப்பதில் மனத்தயக்கம் உண்டாக காரணமாகவும் இது அமைந்தது. 

80களின் பிற்பகுதி தொடங்கி 90களின் இறுதிவரை வந்த படங்களைப் பார்த்தோமேயானால் பெரும்பாலும் பணக்கார வீடுகளை மையப்படுத்தியே கதைக்களம் இருக்கும். அந்த சூழலுக்கு சந்திரசேகர் மிக அன்னியமாகத் தெரிந்தார். கிழக்கு கரை, பெரிய குடும்பம், பெரிய தம்பி,பாண்டவர் பூமி போன்ற கிராமிய படங்களில்கூட  அவர் ஒட்டாமல்தான் தெரிவார்.
ஆடுமேய்க்கும் கீதாரிப்பாக அவர் நடித்த பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் மட்டும் அசலாக பொருந்தியிருந்தார்.

பணக்காரத் தோரணை என்பது தோற்றத்தால் மட்டும் வருவதல்ல. சில பாடி லேங்வேஜில், கண் பார்வையில் அதை எளிதாக கொண்டுவந்து விடலாம். அதுவும் முடியாவிட்டால்வாய்ஸ் மாடுலேஷனிலேயே கொண்டுவந்து விடலாம். சந்திரசேகருக்கு அந்த பணக்காரத் தோரணை வரவேயில்லை. அவரின் ஒரு தோள்பட்டை லேசாக கீழிறங்கியே இருக்கும்.சிரிப்பு ஒரு அப்பாவித்தனமான சிரிப்பாகவே வெளிப்படும். தமிழ் உச்சரிப்பு சரியாக இருந்தாலும் கிராமியத் தனமாக இருக்கும். இதனால் அவருக்கு நிறையப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
1999 நாடாளுமன்றத் தேர்தலில் தோற்ற பின்னால் அவர்  மிகச் சில படங்களிலேயே நடித்துள்ளார். ராம நாராயணன், விசு, ஆர் சி சக்தி, மணிவண்ணன்  போன்ற இயக்குநர்களும், சங்கிலி முருகன் போன்ற தயாரிப்பாளர்களும், பிரபு, விஜயகாந்த், கார்த்திக் என அவருடன் இணைந்து நடித்த முக்கிய நடிகர்களும் தங்கள் படங்களைக் குறைத்துக் கொண்டதால் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
தனியார் தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களின் வருகைக்கு முன்னால், மிமிக்ரி என்பது பொதுவாக ஆர்கெஸ்ட்ரா குழுக்களின் பாடல்களுக்கு இடையேதான் இடம்பெறும். கல்லூரி விழாக்களிலும் கூட கலை நிகழ்ச்சிகளின் இடையே இடம்பெறும். ஒருவர் தமிழ்நாட்டில் புகழ் பெற்று வருகிறார்/அனைத்து தரப்பிலும் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்  என்பதை உணருவதற்கு இருக்கும் அளவுகோல்களில் ஒன்று, அவருடைய குரல் மிமிக்ரி நிகழ்ச்சிகளில் இடம்பெறுவது.

பெரும்பாலும், தனித்துவமான குரல்களையே அப்போதெல்லாம் மிமிக்ரி கலைஞர்கள் தேர்ந்து எடுத்துக்கொள்வார்கள். தனித்துவமான குரல்களில் சந்திரசேகரின் குரலும் ஒன்று. ஆனால் அந்த குரலை/மாடுலேசனை பெரும்பாலும் யாரும் கையாண்டதில்லை. இத்தனைக்கும் அவர் நிறைய வெற்றிப்படங்களில் இருந்திருக்கிறார். அவர் ஏற்று நடித்த கேரக்டர்களை பகடி செய்வதும் எளிது. பின்னர் தனியார் தொலைக்காட்சிகளில் பொழுது  போக்கு அம்சமாக உருவெடுத்த ரியாலிட்டி ஷோக்களில், தங்களுடைய தனித்தன்மையை காட்டுவதற்காக மக்கள் மறந்து போயிருந்த குரல்களை எல்லாம் போட்டியாளர்கள் மிமிக்ரி செய்தார்கள்.


கர்ணனில் சல்லியனாக நடித்து, கரகாட்டக்காரனில் கனகா தந்தையாக. கிழக்கு வாசலில் குஷ்புவின் தந்தையாக நடித்து, சென்ற தலைமுறைவரை நன்கு அறியப்பட்ட சண்முகசுந்தரம், சிறந்த டப்பிங் கலைஞர். பல மொழிமாற்றுப் படங்களுக்கு குரல் கொடுத்தவர். அவருடைய கரகாட்டக்காரன் வசனம் ஒன்றைக்கூட ஏராளமான மிமிக்ரி கலைஞர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். ஆனால் சந்திரசேகரை யாரும் கண்டுகொள்வதில்லை என்பது ஆச்சரியம். 1998க்குப் பிறகு அவர் திரைத்துறையில் இருந்து பெருமளவு விலகியிருந்தது ஒரு காரணம். மேலும் பொது மக்களிடம் சந்திரசேகர் நடிகராக சிறிதளவுகூட தாக்கத்தை ஏற்படுத்தவில்லையோ? என யோசிக்க வைத்த விஷயம் இது. தமிழ்சினிமா குத்தும் முத்திரைகள் ஒருவரின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி வாய்ந்தது மட்டுமல்ல, ஒருவரை மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது போலும்.

காட்சிப்பிழை நவம்பர் மாத இதழில் வெளியான என்னுடைய கட்டுரை. நன்றி காட்சிப்பிழை. 

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


 தனுஷ் இந்தியில் நடிக்க காரணமாக இருந்தவர் ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராய். தனுஷை இயக்குவதற்கு முன் இவர் மாதவனை வைத்து எடுத்தப் ...மேலும் வாசிக்க
 தனுஷ் இந்தியில் நடிக்க காரணமாக இருந்தவர் ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த் எல்.ராய். தனுஷை இயக்குவதற்கு முன் இவர் மாதவனை வைத்து எடுத்தப் படம் தனு வெட்ஸ் மனு. படம் ஹிட்.

இப்போது தனு வெட்ஸ் மனுவின் இரண்டாவது பாகத்தை அதே மாதவன், கங்கனா ரனவத்தை வைத்து எடுக்கிறார். டெல்லியில் நடந்த படப்பிடிப்பின் போது தனுஷும் அதில் கலந்து கொண்டார். மாதவன் தனுஷ் இருவரும் இடம்பெறும் புகைப்படத்தை மாதவன் வெளியிட்டுள்ளார். இது படம் சம்பந்தப்பட்டதில்லை. சும்மா ஜாலிக்கு எடுத்துக் கொண்டது.

இந்தப் படத்தில் தனுஷ் ஒரு காட்சியில் தோன்றுவார், குறைந்தபட்சம் ஒரு பாடல் காட்சியிலாவது வருவார் என முன்பு கூறப்பட்டது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


 பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் பல நடிகர், நடிகைகள் பலர் இணைந்து வருகின்றனர். நடிகர் ...மேலும் வாசிக்க
 பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் பல நடிகர், நடிகைகள் பலர் இணைந்து வருகின்றனர்.

நடிகர் கமல் அவரது பிறந்த நாளன்று மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்தார். இதில் அவரது ரசிகர்களும் பங்கேற்றனர். ஏரி கரையோரம் கிடந்த குப்பைகளை அப்புறப்படுத்தினார். நடிகை தமன்னாவும் மும்பை பகுதியை சுத்தப்படுத்தினார்.

அதன் பிறகு சமந்தா ஐதராபாத்தில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று பள்ளி வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகளை சுத்தம் செய்தார். சுத்தம் செய்த பிறகு த்ரிஷாவும் இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தார் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவும் மனைவி அமலாவுடன் இணைந்து துடைப்பம் ஏந்தி தெருக்களில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார்.

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார். அவருடன் ஏராளமான ரசிகர்களும் சேர்ந்து குப்பை அள்ளினார்கள். மோகன்பாபுவின் மகன் விஷ்ணு, மகள் லட்சுமி மஞ்சு பழைய நடிகை சுமலதா ஆகியோரும் இணைந்து குப்பை அள்ளினார்கள். மோகன் பாபு, ரஜினியை தூய்மை இந்தியா திட்டத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ரஜினியும் மோகன்பாபுவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  


திரைவிமர்சனம்